.

’தமிழ்ப்படம் 2’ படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை!

July 10, 2018, Chennai

Ads after article title

சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழ்ப் படம் 2’ முதல் பாகத்தைப் போல தமிழ் சினிமாவின் பல ஹீரோக்களை கேலி செய்யும் விதத்தில் உருவாகியுள்ளது.


தினமும் வெளியாகும் இப்படத்தின் போஸ்டர்கள் மூலமாகவே சில முக்கியமான படங்களை இப்படக்குழு கிண்டல் செய்து வருகிறார்கள். ரஜினியின் ‘காலா’, விஜயின் ‘சர்கார்’ என அனைத்துப் படங்களையும் கிண்டல் செய்து போஸ்டர் வெளியிட்டு வருபவர்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தியானத்தில் ஈடுபட்டதையும் கிண்டல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம்  திருச்சி, தஞ்சை ஆகிய பகுதிகளில் ரிலீஸ் ஆவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினியின் லிங்கா படத்தின் தோல்வியால் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் போது பரபரப்பாக பேசப்பட்ட சிங்காரவேலன் என்பவர், இந்த தடை உத்தரவை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.