’அட்டு’ திரைப்பட விமர்சனம்

April 03, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.03 (டி.என்.எஸ்) மதுரை என்றாலே எப்படி வெட்டு குத்து சம்மந்தமான கதையை கையில் எடுப்பார்களோ, அதுபோல வட சென்னை என்றாலும் ரவுடிசம் என்ற கதையை தான் தமிழ் சினிமா இயக்குநர்கள் கையில் எடுப்பார்கள்.


அந்த வரிசையிலான ஒரு படமாகவே உள்ளது இந்த ‘அட்டு’.

பெற்றோர் உள்ளிட்ட எந்த உறவுகளும் இல்லாத ஹீரோ மற்றும் அவரது மூன்று நண்பர்கள் அனைவரும் வடசென்னையில் உள்ள குப்பை மேட்டில் வசிக்கிறார்கள். ஹீரோ குப்பைமேட்டில்  வசித்தாலும், ஹீரோயின் அவரை விடாபுடியாக காதலிக்கிறார், அதற்காண காரணத்திற்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்.

இதற்கிடையில், ஹீரோ மற்றும் அவரது நண்பர்களிடம் போதை பொருட்கள் சில சிக்க, அதை அவர்களிடம் இருந்து அபகரிக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து அந்த முயற்சியில் தோற்று விடுகிறது. பிறகு இந்த பிரச்சினையில் அந்த ஏரியா கவுன்சிலர் இறங்க, அவரையும் இந்த நான்கு பேர் குழு வீழ்த்திவிடுகிறார்கள், பிரச்சினை முடிந்தது என்று பார்த்தால், மேலும் ஒரு தாதா மூலமாக இந்த நான்கு பேருக்கு பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினை என்ன அதில் இருந்து இவர்கள் மீண்டு வந்தார்களா, தனது அழகான கதாலியை அட்டு கரம்பிடித்தாரா இல்லையா என்பது தான் கதை.

புதுமுகங்களான ஹீரோ ரிஷி ரித்விக், ஹீரோயின் அர்ச்சனா ரவி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியா செய்திருக்கிறார்கள். யோகி பாபு காமெடி மட்டும் இன்றி குணச்சித்திர நடிகராவதற்கும் முயற்சி செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் எஸ், வட சென்னையை ரவாக காட்டியிருப்பது போல, இசையமைப்பாளர் போபோ சசியும் பின்னணி இசையை ராவாக கொடுத்திருக்கிறார். பாடல்களும் ஒகே ரகம் தான்.

கரடு முரடான வடசென்னை பின்புலத்தில் வழக்கமாக சொல்லப்படும் கதையை சொல்லியிருக்கும் இயக்குநர் ரத்தன் லிங்கா, ஏகப்பட்ட வன்முறைக் காட்சிகளை தினித்திருப்பதுடன், தாதா என்றால் யார், அவர்களது வேலை என்னவாக இருக்கும்? என்று யாரோ அவரிடம் கேட்ட கேள்விக்கு விடை சொல்வதைப் போல ரொம்ப விளாவாரியாக சொல்லியிருக்கிறார்.

காட்சிகளில் உள்ள சிவப்பு எங்கே நம்ம மீதும் பட்டுவிடுமோ! என்று படம் பார்ப்பவர்கள் பயப்படும் அளவுக்கு பல காட்சிகளை சிவப்பு வண்ணத்தால் நிரப்பியிருக்கும் இந்த ‘அட்டு’ இயக்குநரை பாராட்டுவதற்கு பதிலாக அவரது தலையில் ஓங்கி கொட்டணும் போல தோன்றுகிறது

ஜெ.சுகுமார்