‘நந்தினி’ சீரியல் குறித்த ரகசியம் கசிந்தது

May 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 19 (டி.என்.எஸ்) சன் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரம்மாண்ட நெடுந்தொடரான ‘நந்தினி’ இன்றுடன் 100வது எப்பிசோட்டை கடந்துள்ளது.


இதற்கிடையில், இந்த சீரியலில் ரகசியம் காக்கப்பட்ட ஒரு விஷயம் கசிந்துள்ளது.

சினிமாவைப் போல எடுக்கப்படும் ‘நந்தினி’ சீரியலு பிரபல இயக்குநர் சுந்தர்.சி கதை எழுதுவதுடன் அவனி சினி மேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். வெங்கட் ராகவன் திரைக்கதை அமைத்து  பத்ரி கே.என் நடராஜன் வசனம் எழுதி யு.கே  செந்தில் குமார் ஒளிபதிப்பில் இந்த வெற்றி தொடரை இயக்குநர் ராஜ்கபூர் இயக்கியுள்ளார்.

தொடர் ஆரம்பித்தே சில நாட்களிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடிக்க காரணம், சீரியலில் இருந்த விறுவிறுப்பும், பிரம்மாண்டமும் தான். அந்த அளவுக்கு நட்சத்திரங்களின் உடை, பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு படமாக்கப்பட்டு வரும் இந்த சீரியலில் நந்தினி யார்? என்பது இதுவரை ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த ரகசியத்தை சீரியல் குழுவினரே உடைத்துள்ளனர்.

நந்தினி தொடர் குறித்து இயக்குநர் ராஜ்கபூர் கூறுகையில், “நந்தினி என்ற பிரமாண்டத்தை இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு எபிசோடு எடுக்க ஒரு வாரம் முன்கூட்டியே முடிவு செய்வோம். இது ஒரு நாளில் செய்யக்கூடியது இல்லை. இதில் இரண்டு குழுவாக உள்ளோம். சினிமா போன்றே இங்கேயும் கிட்டதட்ட நூறுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள் .  சுந்தர்.சி அவர்கள் இத்தொடரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு  அவர் தனது கருத்தை தெரிவித்து சில  திருத்தங்கள் செய்வார். எபிசோடு எவ்வளவு  என்று சொல்லமுடியாது. அது ரசிகர்களின் வரவேற்ப்பை பொறுத்தது.

நந்தினி தொடர் கன்னடம், தெலுங்கு. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எங்களது கடுமையான உழைப்பு உள்ளது. மாதத்தில் 25  வேலை இருக்கும். ஒரு மணி நேரத்தில் எடுத்த காட்சியை கூடுதலாக நேரம் ஒதுக்கி எடிட் செய்வேன். கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குஷ்பூ இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அது மட்டும் அல்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.” எண்றார்.

நந்தினியில் கதாநாயகி நித்யாராம் பேசும் போது, “முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில்  ஒரே நேரத்தில் நடிக்கும் போது  தயக்கமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது.  

இது சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வுதான் தருகிறது . மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம்  அனைத்தையும் குஷ்பு மேம் தான் தேர்வு செய்வார்கள். இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என்னிடம் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு நந்தினி தொடரை பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள் . அது மிகவும் மகிழ்ச்சியாக  உள்ளது. இந்த புகழ் அனைத்தும் ராஜ் கபூர் சார் அவர்களையே சேரும். இந்த தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.” என்றார்.

100 வது நாளை கடந்துள்ள ‘நந்தினி’ யில் நந்தினியாக இன்னும் சில வாரங்களில் நடிகை குஷ்பு கலக்க இருக்கிறார். அவரா நந்தினி!, என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு, அடுத்தடுத்த எபிசோடுகள் பிரமிப்பை கொடுக்கும் விதத்தில் திரைக்கதையும், காட்சிகளும் இருக்கும், என்று உற்சாகமாக கூறுகிறார்கள் ‘நந்தினி’ குழுவினர்.