‘கும்கி-2’ -க்காக ஹீரோ - ஹீரோயின் தேடும் பிரபு சாலமன்

June 17, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 17 (டி.என்.எஸ்) பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கும்கி’.


விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்திருந்த இப்படம் கும்கி யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

இதற்கிடையே, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பிரபு சாலமன், படத்திற்கான லொக்கேஷன்களை தேர்வு செய்துவிட்ட நிலையில், நாயகன், நாயகியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தனது கதைக்கான சரியான நாயகன், நாயகி கிடைத்தவிட்டால் உடனே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள பிரபு சாலமன், இப்படம் குறித்து பிற விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார்.