.

‘ஆந்திரா மெஸ்’ விமர்சனம்

June 23, 2018, Chennai

Ads after article title

பெரிய தாதாவிடம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடும் ஏ.பி.ஸ்ரீதருக்கு ஒரு பெட்டியை திருடிக் கொடுத்தால் கடனை திரும்ப கொடுக்க வேண்டாம், என்ற ஆபரை தாதா கொடுக்கிறார்.


தனது நண்பர்களான ராஜ் பரத், பாலாஜி, மதி ஆகியோருடன் சேர்ந்து அந்த பெட்டியை கைப்பற்றும் ஏ.பி.ஸ்ரீதர், அந்த பெட்டியை தாதாவிடம் ஒப்படைக்காமல், பெட்டி மற்றும் நண்பர்களுடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

தாதாவிடம் பிடிபடமால் இருக்க வட மாநிலத்தில் தஞ்சம் அடையும் ஏ.பி.ஸ்ரீதர் அண்ட் கோ, ஜமீன் ஒருவரது வீட்டில் தங்க, ஜமீனின் இளம் வயது மனைவியான தேஜஸ்வினிக்கும், ராஜ் பரத்திற்கும் காதல் பற்றிக்கொள்ள, தாதா ஏ.பி.ஸ்ரீதர் அண்ட் கோவை பிடித்தாரா இல்லையா, ஜமீனின் இளம் வயது மனைவியுடனான ராஜ் பரத்தின் காதல் என்ன ஆனது, என்பதே படத்தின் கதை.

பிளாக் காமெடி படம் தான் என்றாலும் படம் முழுவதும் தலைப்புக்கு ஏற்றவாறு ரொம்ப கலர்புல்லாக இருக்கிறது. ஏ.பி.ஸ்ரீதர், ராஜ் பரத், பாலாஜி, மதி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தாலும், ராஜ் பரத் தனித்து தெரிவதோடு பார்வையாலேயே பல இடங்களில் மிரட்டி விடுகிறார்.

நாயகி தேஜஸ்வினி அதிகம் பேசாமல் நடித்திருந்தாலும், அவரது கண்கள் நிறையவே பேசுகிறது. அதிலும் ரொமான்ஸ் காட்சிகளில் ஒட்டு மொத்த திரையரங்கையே கிரங்கடிக்கும் அளவுக்கு அவரது பெர்பார்மன்ஸ் அமைந்திருக்கிறது.

ராஜ் பரத், தேஜஸ்வினி இருவரும் காதல் காட்சிகளில் போட்டி போட்டு நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்திருக்கிறது.

பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கதையின் நாயகர்களில் ஒருவராக வந்தாலும் தனது வில்லத்தனத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இயல்பான தனது நடிப்பாலும், பார்வையாலும் பல இடங்களில் மிரட்டுபவர் வில்லன் வேடத்திற்கு சரியான சாய்ஸாக இருக்கிறார். பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முகேஷ்.ஜி-யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பிளாக் காமெடி படத்திற்கு ஏற்ப படம் முழுக்க ஒரே கலர் டோனை உபயோகப்படுத்தி இருக்கிறார்.

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் வீக் பாய்ண்ட் என்பதை பிளாக் காமெடி மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் ஜெயின் திரைக்கதை அமைப்பும், காட்சி அமைப்பும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருந்தாலும், காதல் காட்சிகளில் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது.

அதே சமயம் கதாபாத்திரங்களின் நடிப்பு, ராஜ் பரத் - தேஜஸ்வினியின் ரொமான்ஸ் பாடல் போன்றவைகளுக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

-ஜெ.சுகுமார்