ஹீரோவான பெரிய ’காக்கா முட்டை’!

May 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 19 (டி.என்.எஸ்) தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் பெரிய காக்கா முட்டை வேடத்தில் நடித்த விக்னேஷ் ‘குழலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.


அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்த எஸ்தர்.

பிள்ளைகளின் பருவங்கள் மாறுபடும் பொழுது பெற்றோர்களுக்கு எதிர்ப்பாக மாறுகிறது. பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர்கள் ஏற்றார்களா? என்ற எதார்த்தமான பதிவோடு உருவாகும் இப்படத்தை செரா.கலையரசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.