ஹாக்கி உலக லீக் அரையிறுதி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

June 19, 2017, Chennai

Ads after article title

லண்டன், ஜூன் 19 (டி.என்.எஸ்) லண்டனில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரின், நேற்றைய போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.


இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும், ஆகாஷ் தீப் இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது உமர் பூட்டா ஒரு கோலும் அடித்தனர்.

இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 7-1 என பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.