ஸ்பெயின் கிராண்ட்பிரீ : ஹமில்டன் வெற்றி

May 15, 2017, Chennai

Ads after article title

பார்சிலோனா, மே 15 (டி.என்.எஸ்) இந்த ஆண்டுகான பார்முலா-1 கார் பந்தயத்தின் 2 வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரீ, பார்சிலோனாவில் நேற்று நடைபெற்றது.


307.104 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை கடக்க, வழக்கம் போல 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீற்ப்பாய்ந்தனர். இதில், பந்தய தூரத்தை 1 மணி நேரம் 35 நிமிடங்கள் 56.497 வினாடியில் கடந்து மெர்சிடஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் 2 வது இடத்தையும், ரெட்புல் அணி வீரர் டேனியல் ரிச்சார்டே 3 வது இடத்தையும் பிடித்தார்கள். போர்ஸ் இந்தியா அணி வீரர்கள் செர்ஜியோ பெரேஸ் 4 வது இடத்தையும், ஈஸ்ட்பான் ஒகான் 5 வது இடத்தையும் பிடித்தார்கள்.

5-வது சுற்று முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 104 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 98 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 63 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.