வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

May 10, 2017, Chennai

Ads after article title

மதுரை, மே 10 (டி.என்.எஸ்) மதுரையின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.


தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி மதுரை வந்த கள்ளழகர், பக்தர்களின் “கோவிந்தா...கோவிந்தா...” கோஷத்தோடு இன்று காலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது கையில் தீபம் ஏற்றி வரவேற்றனர்.