.

வெள்ளி விழா ஆண்டில் ‘ஜென்டில்மேன்’!

July 10, 2018, Chennai

Ads after article title

ஷங்கர் இயக்கத்தில், அர்ஜுன் நடிப்பில் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


அப்படத்தின் மூலம் ஷங்கரை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவே வியக்கும் விதத்தில் மிக பிரம்மாண்டமாக தயாரித்தார்.

சாதாரண ஆளாக இருந்து உழைத்து முன்னேறி திரைத்துறையில் கால் பதித்த கே.டி.குஞ்சுமோன் சுமார் 40 ஆண்டுகால கலைத்துறை வாழ்க்கையை கடந்திருக்கிறார். இவருக்கு அடையாளமாக தற்போதும் ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் இருக்கிறது.

இந்த நிலையில், ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதனை கே.டி.குஞ்சுமோன் மற்றும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.