.

வெளிமாநில மீன்களுக்கு தடை - அசாம் அரசு நடவடிக்கை

July 12, 2018, Chennai

Ads after article title

மீன்கள் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் கெமிக்கல் கலப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த கெமிக்கல் கேன்சரை உண்டு பண்ணும் என்பதால் மக்களிடம் தற்போது மீன் உணவு சாப்பிட அச்சம் ஏற்பட்டுள்ளது.


சென்னையில் நடத்தப்பட்ட ஆய்விலும் மீன்களில் பார்மலின் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்களில் பார்மலின் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஆந்திரா உள்ளிட்ட சில வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்களில், பார்மலின் ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு அசாம் மாநில  அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனவும் மீறினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் பியுஸ் ஹசாரிங்கா தெரிவித்துள்ளார். 

PhotoAnjuman Udayakumar