.

வீராணம் ஏரி நிரம்பியது - சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

August 11, 2018, Chennai

Ads after article title

போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் வராததாலும் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.


இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தற்போது வீராணம் ஏரிக்கு வந்துள்ளது. தொடர் நீர் வரத்தால் தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.