.

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான ராஜசேகர் மகள்

July 12, 2018, Chennai

Ads after article title

பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகர் - நடிகை ஜீவிதா தம்பதியின் மகள்  ஷிவானி, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தனது மகளை  நாயகியாக்க டாக்டர்.


ராஜசேகர் - ஜீவிதா தம்பதி கதை கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில்,  அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கம் படத்தின் மூலம்  ஷிவானி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஸ்காந்த், சிங்கம் புலி, பிரவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.