.

விவாகரத்துக்காக நீதிபதியிடம் கெஞ்சிய ஹாலிவுட் நடிகை

August 09, 2018, Chennai

Ads after article title

உலக அளவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஹாலிவுட் நடிகை  ஏஞ்சலினா ஜோலி. ஐவரும் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்,  கடந்த 2014 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.


மூன்று குழந்தைகளை பெற்ற இந்த தம்பதி, மூன்று குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டனர்.

இதற்கிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், முறையாக விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகளை பராமரிக்க பிராட் பிட் அர்த்தமுள்ள எந்த உதவியும் செய்யவில்லை என ஜோலி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஜோலி நீதிபதியிடம் கெஞ்சி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.