.

விவசாயம் தொடர்பாக புது ஐடியா - வைரலாக அமைச்சரின் பேச்சு

July 06, 2018, Chennai

Ads after article title

நெல் வயலில் நின்று வேத மந்திரம் சொன்னால், விளைச்சல் அமோகமாக இருக்கும், என்று கோவா மாநில விவசாய அமைச்சர் யோசனை கூறியிருக்கிறார்.


கோவா மாநிலத்தில் விவசாய அமைச்சராக இருக்கும் கோவா முற்போக்கு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய், அண்டவெளி விவசாயம் என்ற புதிய விசய முறை அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில்,  "அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 

இப்படி சொல்லும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும். இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்து உள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." என்று தெரிவித்தார்.

இவரது பேச்சுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தால், பலர் விமர்சனமும் செய்து செய்து வருகிறார்கள். எது எப்படியோ, இந்த பேச்சால் அமைச்சர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.