.

விம்பிள்டன் டென்னிஸ் - முன்னணி வீரர்கள் அதிர்ச்சி தோல்வி

July 06, 2018, Chennai

Ads after article title

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2 வது சுற்று போட்டியில், குரோஷியாவின் மரின் சிலிச் - அர்ஜென்டினாவில் குடே பெல்லா மோதினார்.


உலக தரவரிசை பட்டியலில் 6 ம் இடத்தில் இருக்கும் மரின் சிலிச், 82 வது இடத்தில் இருக்கும் குடோ பெல்லாவிடம் 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. 

இதே போல், மற்றொரு முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோவிடம் தோல்வி அடைந்தார்.