.

விஜயின் 63 வது படத்தில் ஹீரோயினாகும் பாலிவுட் நடிகை!

August 07, 2018, Chennai

Ads after article title

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.


அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைய உள்ள விஜயின் 63 வது படமான இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

'தெறி', 'மெர்சல்' என விஜய்க்கு தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அட்லீ மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், விஜய் - அட்லீ இணையும்  படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை கைரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.