.

வாலிபர் அடித்து கொலை - போலீஸ் வேடிக்கை பார்த்ததாக குற்றசாட்டு

July 05, 2018, Chennai

Ads after article title

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக அடித்து கொலை செய்ததை காவல் துறை வேடிக்கை பார்த்ததாக, பலியானவரின் தம்பி பரபரப்பு குற்றசாட்டு கூறியுள்ளார்.


கமுதி தாலுகாவில் உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரும், அவரது தம்பி முருகேசன் என்பவரும் பேரையூர் கடைவீதியில் நின்று கொண்டிருக்க, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 50 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று  காளிதாஸ் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. தடுக்க சென்ற சகோதரர் முருகேசனும் தாக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட காளிதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்,  தன அண்ணனின் கொலைக்கு முழு காரணமே போலீசார் தான் என்று கொலை செய்யப்பட காளிதாசன் தம்பி முருகேசன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறிய அவர், போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பலை தடுக்க எவ்வித முயற்சியும் செய்யாமல், நின்றதோடு தடுக்க சென்ற தன்னையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர், என்று தெரிவித்தார்.

மேலும், அந்த கும்பலுக்கு தலைவராக செயல்படுபவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போலீசாரே கொலைக்கு துணை நின்றுவிட்டனர், என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.