.

வாக்கு சீட்டு முறைக்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக!

August 04, 2018, Chennai

Ads after article title

தற்போது நடைமுறையில் உள்ள வாக்கு எந்திரத்திற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, திரும்பவும் வாக்கு சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.


 

இந்த நிலையில், அதிமுக-வும் வாக்கு சீட்டு முறைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக, பாரளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது வாக்கு சீட்டு முறையை வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளில் வாக்கு சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்குச்சீட்டு முறையை அ.தி.மு.க வரவேற்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.