.

ரோஜாவை எதிர்த்து களத்தில் இறங்கும் நடிகை வாணி விஸ்வநாத்!

July 05, 2018, Chennai

Ads after article title

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும் நடிகை ரோஜாவுக்கு எதிராக, நடிகை வாணி விஸ்வநாத்தை களம் இறக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.


இந்த நிலையில் 2019 சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜாவை எதிர்த்து ஒரு நடிகையை களமிறக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதன்படி நடிகை வாணி விஸ்வநாத்தை வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சி தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நகரிக்கு வந்த நடிகை வாணி விஸ்வநாத் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு அழைப்பின் பேரில் விரைவில்தான் தெலுங்கு தேசம் கட்சியில் இணையப் போவதாக அறிவித்தார்.