ரூ.36 கோடி போதைப்பொருளுடன் மும்பையில் கைதான கொலம்பியா நாட்டுக்காரர்

June 13, 2017, Chennai

Ads after article title

மும்பை, ஜூனெ 13 (டி.என்.எஸ்) மும்பையில் ரூ.36 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மும்பையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில், வெளிநாட்டுக்காரர் ஒருவர் அதிக அளவு போதைப்பொருளுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று அந்த வெளிநாட்டுக்காரர் தங்கியிருந்த அறையில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அந்த அறையில் 12 பாக்கெட்டுகளில் ‘கோகைன்’ என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 6 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.36 கோடி ஆகும்.

இதைத் தொடர்ந்து அந்த வெளிநாட்டுக்காரரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் பிரிடி ரெண்டீரியா என்பதும் தெரிய வந்தது. 32 வயதாகும் அவர், இதற்கு முன்பாக இரண்டு முறை மும்பைக்கு போதை பொருள் கடத்தி வந்திருக்கிறாராம்.

தற்போது, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அந்த போதை பொருளை யாரிடம் கொடுக்க அவர் காத்திருந்தார் உள்ளிட்ட உண்மைகளை கண்டறிய தீவிரம் காட்டி வருகிறது.