ரூ.1 கோடி விவகாரம் : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற ரஜினிகாந்த்

June 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 19 (டி.என்.எஸ்) நதிகள் இணைப்புக்காக ரூ.1 கோடி தருவதாக அறிவித்ததை உடனடியான நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கையை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு, விரைவில் ரூ.


1 கோடியை தருவதாக கூறியுள்ளார்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சென்னையில் போராட்டம் நடத்தியதோடு, திரைத்துறையைச் சேர்ந்த பல பிரமுகர்களை சந்தித்து வருகிறார்கள்.

அதன்படி, சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில், நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் வீட்டில் விவசாயிகள் சந்தித்தனர்.

ரஜினிக்கு சால்வை அணிவித்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், தமிழக விவசாயிகளின் கஷ்டங்கள் பாதிப்புகள் குறித்தும் நதிகள் இணைப்பு தொடர்பாக கோரிக்கை மனுவையும் ரஜினிகாந்த்திடம் வழங்கினார்.

மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த நிதி உதவியை பிரதமரிடம் உடனே வழங்குமாறு ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார். அதனை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விரைவில் ரூ.1 கோடி நிதியை வழங்குவேன் என உறுதி அளித்தார்.