ரான்சம்வேர் தாக்குதல் : அமெரிக்காவின் நூதன கொள்ளையாம்!

May 16, 2017, Chennai

Ads after article title

மாஸ்கோ, மே 16 (டி.என்.எஸ்) கடந்த இரண்டு நாட்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் இணைய தாக்குதலாகும்.


கம்ப்யூட்டர்களை ஹாக் செய்வதுடன், குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை அழிக்காமல் இருக்க 300 டாலர் தர வேண்டும், என்று மிரட்டி பணம் பறிக்கப்பட்டு வருகிறது.

சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வைரஸ் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர்களில் தான் அதிகளவில் தாக்கப்படுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், ரான்சம்வேர் வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்கா தான் முழு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, அமெரிக்கா உலக நாடுகளிடம் இருந்து நூதன முறையில் கொள்ளையடிப்பதாகவும், தெரிவித்துள்ளது.