.

ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம் - கண்ணையா எச்சரிக்கை

July 05, 2018, Chennai

Ads after article title

ஏப்ரல் மாதத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டம் நடக்கும், என்று எஸ்ஆர்எம்யு-ன் மாநில தலைவர் என்.


கண்ணையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) சென்னை கோட்ட செயற்குழு கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என். கண்ணையா, தலைவர் சி.ஏ. ராஜா ஸ்ரீதர், சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன், சென்னை கோட்ட தலைவர் யுவராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணையா, “ 7-வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கைகளை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துவது என்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இங்கு தொழிலாளர்கள் மத்தியில் போராட்டத்துக்கு நாம் எப்படி தயாராக வேண்டும் என்பதை விளக்குவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.“ என்று தெரிவித்தார்.