.

ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்தால் புரட்சி அல்ல, வறட்சி தான் ஏற்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

July 06, 2018, Chennai

Ads after article title

ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்தால் புரட்சி வெடிக்காது, வறட்சி தான் ஏற்படும், என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.


சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைக்க ஜெயக்குமார், "தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது. குறிப்பாக தி.மு.க. செயல்தலைவர் நிறைய விமர்சனங்களை முன்வைக்கிறார். கவர்னர் விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் மாற்றி மாற்றி கருத்துகள் சொல்லி வருகிறார். தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர்ராவ் இருந்த சமயத்தில், ‘நிலையான கவர்னர் தேவை’ என்று கருத்து கூறினார். தற்போது நிலையான கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்தும், அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறிவருகிறார்.

கவர்னர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர் ஆவார். அதன்படி தான் தனது கடமையை ஆற்றுகிறார். அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி தான் கவர்னர் செயல்படுகிறார். அதே அரசியலைப்பு சட்டத்துக்குட்பட்டு தான் அரசும் செயல்படுகிறது.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்தால் புரட்சி ஏற்படும் என்று நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றுமட்டும் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும்." என்று தெரிவித்தார்.