.

ரஜினியின் '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

July 11, 2018, Chennai

Ads after article title

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. ரஜினிகாந்த் படங்களிலேயே  இந்த படம் தான் பெரிய பட்ஜெட்.


இந்த படத்திற்காக லைகா நிறுவனம் இதுவரை சுமார் 400 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் வெளியாகாமல் போனது. இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் பணிகள் நிறைவு பெறாததால் வெளியிட முடியவில்லை. இதையடுத்து ரிலீஸ் தேதியில் பல முறை குழப்படம் ஏற்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு தான் 2.0 படம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது. ஆனால், இந்த தகவலை தயாரிப்பு தரப்பு மறுக்கவும் இல்லை, இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் இயக்குனர் ஷங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய உள்ளதால், படத்தை வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.