ரஜினிக்கு என்ன தெரியும்?, எதற்கு இந்த அலப்பறை! : வைரலாகும் நீதிபதியின் பதிவு

May 18, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 18 (டி.என்.எஸ்) சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருவதோடு, தமிழர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வரும் மார்க்கண்டேய கட்ஜு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரை அரசியலுக்கு அழைக்கும் தமிழக மக்கள் குறித்தும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது.


அரசியலுக்கு வர நினைக்கும் ரஜினிக்கு என்ன தெரியும்?, மருத்துவ துறையில் எதாவது மாற்றம் செய்வதற்கான திட்டம் வைத்திருக்கிறாரா?, தமிழக கல்வித் துறை அல்லது விவசாயம் போன்றவற்றியில் மாற்றம் செய்யக் கூடிய அல்லது அவற்றை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்வதற்கான திட்டம் வகுத்து வைத்திருக்கிறாரா?, இப்படி எந்த திட்டமும் இல்லாத ரஜினிகாந்த் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், அவரை தமிழக மக்கள் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும், என்று வலியுறுத்துகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள கட்ஜு, அமிதாப் பச்சனைப் போல ரஜினிக்கும் தலையில் ஒன்றுமில்லை, என்று காட்டமாகவும் கூறியுள்ளார்.

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத்தில் கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், மார்கண்டயே கட்ஜுவின் இத்தகைய பதவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.