.

ரஜினிகாந்த் படத்தில் பகத் பாசில்!

July 14, 2018, Chennai

Ads after article title

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசி, தமிழ் சினிமா மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து பல தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.


கதாபாத்திரம் வலுவானதாக இருந்தால், வில்லன் உள்ளிட்ட எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.

 

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் பகத் பாசில் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதால், பகத் பாசிலின் வேடம் என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், அவர் ரஜினிகாந்தின் நண்பர் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.