.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது - சத்திய நாராயணன்

August 04, 2018, Chennai

Ads after article title

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோவில் ஆடிவெள்ளி விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் குடும்பத்தார் கலந்துக் கொண்டார்கள்.


 

பின்னர் திருப்பத்தூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சத்திய நாராயணன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரஜினி நடிக்கும் புதிய படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ரஜினி விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவார். இதனை யாராலும் தடுக்க முடியாது. தமிழக மக்கள் ஆதரவுடன் ரஜினி முதல்வர் ஆவார்.

 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. மாநில நிர்வாகிகள் சுதாகர், ராஜுமகாலிங்கம், செயல்பாடுகளில் திருப்தி இல்லை. விரைவில் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.” என்றார்.