.

ரசிகர்களை குழப்பிய யுவனின் முதல் தயாரிப்பு!

August 09, 2018, Chennai

Ads after article title

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர்கள் தற்போது ஹீரோவாக உருவெடுத்து வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.


அவர் தயாரித்திருக்கும் முதல் படம் 'பியர் பிரேம காதல்.

பிக் பாஸ் பிரபலங்கள் ரைசா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் ரிலீஸ் தேதியில் பல குளறுபடியை சந்தித்து வருகிறது. முதலில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாவதாக இருந்த இப்படம் பிறகு ஒரு நாள் முன்பாக, அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்யபப்டும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பு இன்றை பியர் பிரேம காதல் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், இப்படம் எப்போது தான் வெளியாகிறது, என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.