.

முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிருக்கு ஆபத்து - உளவுத்துறை எச்சரிக்கை

August 04, 2018, Chennai

Ads after article title

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று லக்னோவில் நடக்கும் விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.


அந்த சமயத்தில் அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்ட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய பிரதேச மாநில போலீசார், இந்த தகவலை உத்தரபிரதேச மாநில போலீசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உடனடியாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விழாவுக்கு வரும் யோகி ஆதித்யநாத்தை குண்டு துளைக்காத காரில் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கும் பாதுகாப்பு படையினர், அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பையும் வழங்க முடிவு செய்துள்ளனர்.