.

முடி கொட்டுவதை நிறுத்த வேண்டுமா? - இதை செய்யுங்க!

July 06, 2018, Chennai

Ads after article title

மனிதர்களுக்கு கவலை அளிக்கும் விஷயங்களில் முடி கொட்டுவதும் முக்கியமான ஒன்றாகி வருகிறது. ஒரு காலத்தில் 50, 60 வயதை கடந்த நிலையில் முடி கொட்டும் என்றால், தற்போதைய சூழலில் 30 வயதை கடந்து விட்டாலே முடி கொட்டுவது தொடங்கி விடுகிறது.


இதை தடுக்க பலர் பல வழிமுறைகளை கையாள்வது போல, இதை வைத்து பலர் வியாபாரமும் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில், முடி கொட்டுவதை தவிர்க்க வேண்டுமானால், சில கடவுள்களை வணங்கி, சில பரிகாரங்களை செய்ய வேண்டுமாம்.

அந்த வகையில், அதிக முடியை கொண்டவன் எனும் பொருளுடைய கேசவ பெருமாளை வணங்கினால் முடி கொட்டுவது நின்று, வளர தொடங்குமாம். அதேபோல், வராக மூர்த்தியை வணங்குவதும் முடிவளர்ச்சியை அதிகரிக்குமாம். 

இத்துடன்,  வைதீஸ்வரன் கோயிலில் வணங்கி வருவதோடு, திருவாதிரை நக்ஷத்திர நாளில்  லிங்கோத்பவரை வணங்குவதிலாலும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.

திருச்சி மலைக்கோட்டையில் குடிக்கொண்டிருக்கும் தாயுமானவர் சன்னதியில் அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் மட்டுவார்குழலபி, சனைஸ்வர பகவானை வணங்கினாலும் முடி கருமையாக அடர்த்தியாக வளருமாம்.

அதேபோல், சுக்கிர பகவானின் அருளை பெற கும்பகோணம் கஞ்சனூர், திருச்சி ஸ்ரீ ரங்கம், சென்னை திருமயிலையின் சுக்கிர ஸ்தலமான வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள சுக்கிர பகவான், சென்னை மாங்காடு வெள்ளீஸ்வரர் காமாக்ஷி ஆகியவர்களை வணங்கி வந்தாலும் அழகான கூந்தலை பெறலாமாம்.

இந்த தகவல்களை பிரபல ஜோதிடர் ஒருவர் இணையதளம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.