மருத்துவரீதியில் நவராத்திரிவிழா! ஒன்பது வகையான தேவியரின் பிரசாதம்

October 03, 2016, Chennai

Ads after article title

நவராத்திரி விழா பற்றி அனைவரும் அறிந்ததே. நவராத்திரியில் அம்மனுக்கு ஒன்பது வகையான பிரசாதம் ஒன்பது நாட்களில் வழங்கப்படுகிறது.


நவராத்திரி என்று சொன்னால் சுண்டல் முக்கிய பங்கு வகிக்கும். புரட்டாசி மாதத்தில்  சில உணவு கட்டுப்பாடுகளை நமக்குளே வகுத்திருப்போம். பருவ நிலை மாறுபாடுகள் இந்த மாதத்தில் அதிகமானதாக இருக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தோல் நோய்களை தடுக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு. எனவேதான் ஒவ்வொரு நவராத்திரி நாள் கொலு வழிபாட்டின் முடிவிலும் சுண்டல் வழங்கப்படுகின்றது.

இந்த மாதத்தில் உடல் சோர்வுகள், நோய் காரணிகள்  அதிகமானதாக இருக்கும் . பயிரில் புரத சத்து அதிகம் என்பதால் இதுவும் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனால் நவராத்திரி விழா மருத்துவ ரிதியில் பங்கு வகிகின்றது என்றால் மிகை ஆகாது. அம்மனுக்கு இந்த ஒன்பது நாட்களும் வித விதமான பிரசாதம் வைக்கப்படுகிறது. அது என்னென்ன என்று பார்போம்.

 முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
 இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
 நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
 ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
ஆறாம்  நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
 ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
 ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.