.

மனைவி கண் முன்னே கணவரை கொலை செய்த பெண்!

August 10, 2018, Chennai

Ads after article title

ஈரோட்டை அடுத்த பெரியசேமூர் கல்லாங்கரட்டை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவரதுமனைவி லீலாவதி.


செல்வக்குமாருக்கு வயது 25, லீலாவதிக்கு வயது 22. செல்வக்குமாரின் அண்ணி முறை உறவுள்ளவர் லட்சுமி என்பவர். கடந்த 3 ஆம் தேதி லட்சுமி, தனது கணவரை விட்டு இன்னொருவருடன் ஓடிப் போய்விட்டார்.

இப்படி லட்சுமி வீட்டைவிட்டு போய்விட்டதால் குடும்ப மானம் போகிறதே என்று நினைத்த செல்வகுமார், எங்கெங்கேயே தேடி, கடைசியில் சங்ககிரியிலிருந்து கடந்த 6 ஆம் தேதி லட்சுமியை மீண்டும் அவரது வீட்டுக்கு கூட்டி வந்து விட்டு சென்றார். இதனால் லட்சுமிக்கு செல்வக்குமார் மீது ஆத்திரம். செல்வகுமார் மீது பயங்கரமான கோபத்தில் இருந்துள்ளார் லட்சுமி.

இந்நிலையில், நேற்று தன் செல்வகுமார் தனது மனைவி லீலாவதியுடன் வெளியில் சென்று லட்சுமி வீட்டு வழியே வந்து கொண்டிருந்தார். செல்வகுமாரை கவனித்த வந்த லட்சுமி, வீட்டிலிருந்து ஓடி வந்து தகராறில் ஈடுபட்டார், "என்னை ஏன் இங்கே கூட்டி வந்தாய்? அப்படியே என்னை விட்டிருக்க வேண்டியதுதானே?" என்றார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் செல்வகுமார் தலையில் அடித்தார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் வர, பெரிய கல் ஒன்றை எடுத்து வந்து அவர் காலில் போட்டதோடு, அவரது ஆண் உறுப்பு மீதும் எட்டி உதைத்தார். இதனால் வலியால் துடித்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், லட்சுமி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.