.

மதுரை அருகே 80 க்கும் மேலான மயில்கள் இறந்தது! - வனத்துறை விசாரணை

August 04, 2018, Chennai

Ads after article title

மதுரையை அடுத்துள்ள உத்தங்குடி கால்வாய் அருகே உள்ள மருதங்குளம் பகுதியில் ஏராளமான மயில், காடை உள்ளிட்ட பறவைகள் வருகின்றன.


பறவை இனங்களுக்காக சிலர் நெல் உள்ளிட்ட உணவு தானியங்களை வழங்கி வந்தனர். 

 

இன்று காலை வழக்கம்போல் உணவு தானியம் கொடுக்க சென்ற ஒருவர் அங்கு ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினருடன் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த பகுதியில் ஆங்காங்கே குவியல் குவியலாக 80-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன. காடை உள்ளிட்ட சில பறவைகளும் இறந்து கிடந்தன.

 

அதன் அருகே நெல் தானியங்களும் சிதறி கிடந்தன. வனத்துறையினர் அந்த நெல்லை சேகரித்தனர். அதில் வி‌ஷம் கலந்து இருக்கலாமா? என்பது குறித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.