மக்கள் வாழ்வதற்கான வசதி கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

April 20, 2017, Chennai

Ads after article title

வாஷிங்டன், ஏப்.20 (டி.என்.எஸ்) பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.


இந்த நிலையில், பூமியில் இருக்கும் அனைத்து வசதிகளும் கொண்ட மக்கள் வாழ்வதற்காக புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

செந்நிற நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் இக்கிரகத்திற்கு, ’எல்.எச்.எஸ் 1140’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கிரகம் உள்ளது. அதன் மேற்புறத்தில் தண்ணீர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

புவியை விட சிறியதாகவும், குளிர்ச்சி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. மேலும் அடர்த்தி 7 மடங்கு அதிகமாக உள்ளது. அதன் விட்டம் 18,000 கி.மீ என அமைந்துள்ளது. புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்தும், இரும்பு படிமங்கள் நிறைந்தும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த கிரகத்தில், தண்ணீர் இருப்பதால் மக்கள் வாழ முடியும் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், இந்த கிரகத்தில் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளிச்சம் விழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.