.

மகளிர் சுயஉதவிக்கு குழுக்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கடன் - அமைச்சர் உத்தரவு

July 12, 2018, Chennai

Ads after article title

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.


இதில் தாய் திட்டம், பசுமை வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி, தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுதல், ஊரக சாலைப் பணிகள், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ள பணிகளை, தரமாகவும், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் நிறைவேற்ற வேண்டும். நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க விரைவாக செயலாற்ற வேண்டும். அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் இதுவரை 19,230 மகளிருக்கு ரூ.47 கோடியே 92 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவுபடுத்தி அதிக அளவில் மகளிருக்கு வாகனங்கள் வழங்க வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், துறையின் கீழ் 110- விதியில் முதல்வர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11,000 கோடி வங்கிக்கடன் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அறிவித்ததை சுட்டிக்காட்டி இதற்கான திட்ட செயலாக்கத்தை விரைவுபடுத்தவும் அமைச்சர் உத்தரவிட்டார்.