.

போதைப்பொருள் வழக்குக்கு மரண தணடனை - இலங்கை அரசு ஒப்புதல்

July 11, 2018, Chennai

Ads after article title

போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க இலங்கை அரசு  முடிவு செய்தது. இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.


 

இது குறித்து அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறுகையில், "தீவிர குற்றச்செயல்களை தடுப்பதற்கு மீண்டும் மரண தண்டனையை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அதிபர் சிறிசேனா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனை அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களை நடத்தி நாட்டை அழிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சில குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தாலும் வெளியே போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்கின்றனர்” என்றார்.