.

பேட்மிண்டன் தரவரிசை - இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

July 06, 2018, Chennai

Ads after article title

உலக பேட்மிண்ட பெடரேசன் நேற்று வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடாம்பி, 7 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


எச் எஸ் பிராணய் ஒரு இடம் பின்தங்கி 14-வது இடத்திலும், சமீர் வர்மா 20-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 3-வது இடத்திலேயே நீடிக்கிறார். சாய்னா நேவால் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இரண்டு இடங்கள் பின்தங்கி 21-வது இடத்தை பிடித்துள்ளது. மானு ஆத்ரி - பி சுமீத் ரெட்டி ஜோடி 28-வது இடத்தில் உள்ளது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொண்ணப்பா - என் சிக்கி ரெட்டி 28-வது இடத்தில் உள்ளனர்.