பெண் ஆசிரியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு!

May 09, 2017, Chennai

Ads after article title

சண்டிகர், மே 09 (டி.என்.எஸ்) பஞ்சாப்பில் பெண் ஆசியர்களுக்கான புதிய ஆடை கட்டுப்பாட்டு விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.


பஞ்சாபின் மேல்நிலைக் கல்வித்துறை சார்பில், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ”அரசு பள்ளிகளில் பணிப்புரியும் பெண் ஆசிரியர்கள் பணிக்கு வரும் போது ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற அநாகரீகமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது. பஞ்சாபி கலாச்சார ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஆசிரியர்கள் தான் மாணவர்களின் முன்னோடி. எனவே பெண் ஆசிரியர்கள் முழுமையாக உடலை மறைக்குபடி ஆடை அணிந்து வர வேண்டும்”, என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.