பெண்கள் ஹாக்கி : நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி

May 15, 2017, Chennai

Ads after article title

புகெகோ, மே 15 (டி.என்.எஸ்) நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


இதன் முதல் போட்டி புகெகோக்கில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் கிரான்ட், ஒலிவியா மெர்ரி, ராச்செல், டீன்னா ரிட்ஷி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.இந்திய அணி தரப்பில் அனுபா பர்லா கோல் அடித்தார்.