பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு விடுமுறை இல்லை!

May 09, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 09 (டி.என்.எஸ்) ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்படும் என்று தமிழக பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.


 

மே 1 ஆம் தேதி முதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சோதனை கட்டமாக 5 நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்த மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கூறியது.

மத்திய அரசின் உத்தரவுப்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில், தமிழக பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல பெட்ரோல் பங்குகள் செயல்படும், என்று தெரிவித்துள்ளார்.