புரட்டாசி பிறந்தாச்சு அசைவ பிரியர்களே! புரட்டாசி மாதத்தின் அறிவியல் சார்ந்த உண்மை

September 17, 2016, Chennai

Ads after article title

'ஐயோ புரட்டாசி மாசம் வந்துடே, வீட்டுல சிக்கன், மட்டன் வைக்க மாட்டங்களே! வாய கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கணுமே, எவன்டா இந்த புரட்டாசி மாசம் லா கண்டு பிடிச்சான்' என புலம்பிகிட்டே இருப்பிங்க.


  நம் முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு காரணமும் ஏதாவது ஒரு விதத்தில் அறிவியல் பூர்வகமாக அமையும். அந்த விதத்தில் இந்த புரட்டாசி மாதம் என்ன விதிவிலக்கா.

புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் காற்றினில் ஈரப்பதம் குறைந்து, வெயில்  கடுமையாக இருக்கும். அதோடு உஷ்ணமாக இருக்கும்.இரவு நேரத்தில் மழை பெய்து இதமான குளிருல படுத்து உரங்க அவ்வளவு சுகமா இருக்கும். பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாகவும் இரவு நேரத்தில் குளிர் அதிகமாகவும் இருக்கும். இந்த நேரத்தில் அசைவ உணவினை உட்கொண்டால்  வயிறு சார்ந்த உபாதைகளுக்கு ஆளாவோம் என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் அசைவத்தை புரட்டாசியில் தவிர்த்தனர் . ஒரே நாளில் மாறுபட்ட தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ளும் மனிதன் அதற்கேற்றவாறு தனது உடல்நிலையையும் பராமரிக்க வேண்டி உள்ளது. அதனாலேயே உணவுப் பழக்க வழக்கத்திலும் கட்டுப்பாடு என்பது அவசியமாகிறது.

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னியில் சஞ்சரிக்கிறான். இதனால் இந்த மாதத்திற்கு கன்னியா மாதம் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் என்னமோ 'மெட்ராஸ் ஐ'  வர காரணம் போல. இந்த தட்ப வெப்ப நிலை மறுபாட்டினால் கண் சார்த்த கோளாறுகள் புரட்டாசி மாதத்தில் அதிகமாக வரும்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி சனி கிழமைகளில் விரதம் இருந்து, மா விளக்கு போட்டு பெருமாளை வழிபட்டால் அவன் அருள் கிட்டும். பெருமாள் பக்தர்களை சனி என்றும் அணுக மாட்டான். இதனால் இந்த புரட்டாசி மாதத்தில் சனியின் வீரியம் குறைவாக இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை. முன்னோர்கள் ஆசி கிட்டும் மாதம் என்றும் கூறுவர். இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.

புரட்டாசி மாதத்தில்  இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் . திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது