புதிய அரசியல் கட்சி : பிறந்தநாளன்று அறிவிக்கும் ரஜினிகாந்த்!

June 17, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 17 (டி.என்.எஸ்) தான் விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதை சூசகமாக தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், தற்போது அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.


தமிழகத்தில் உள்ள சில முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடக பெரும் புள்ளிகளுடன் அவ்வபோது பேச்சு வார்த்தை நடத்தி வரும் ரஜினிகாந்த், தனி கட்சி தொடங்குவதில் ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த், ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கும் ரஜினிகாந்த், தனது பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.