பிறந்த தேதிக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்!

April 17, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.17 (டி.என்.எஸ்) ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களது குணநலன்கள், எதிர்காலம் போன்றவற்றை கணிக்க முடியும்.


அதேபோல் ஒருவர் பிறந்த தேதிக்கு ஏற்ப வீட்டில் வைக்கப்படும் சில பொருட்களால் நன்மைகள் பெருகி செல்வம் செழிக்க செய்யும். அதுபற்றிய விபரம் பின்வருமாறு:

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.

பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 ஆக இருந்தால், வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.

3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.

4 எனில், அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும்.

5 எனில், அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

எண்ணிக்கை 6 ஆக இருக்கும் போது, வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.

கூட்டு எண்ணிக்கை 7 எனில், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.

8 ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இது கெட்ட ஆற்றலை வெளியேற்றி நல்ல ஆற்றலை வீடு முழுவதும் உலாவச் செய்கிறது.

பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது நல்லது.