.

பாலியல் புகார் அளித்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட விளையாட்டு வீரர்

August 07, 2018, Chennai

Ads after article title

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் கோஷ், தன மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சவும்யஜித் கோஷ், இரண்டு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார்.


மிகவும் குறைந்த வயதில் தேசிய சாம்பியன் என்ற பெருமையையும் பெற்ற இவருக்கு தற்போது 22 வயதாகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஜெர்மனியில் நடந்த போட்டியில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, திருமணம் செய்து கொள்வதாக பழகி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று அவர்  மீது, 18 வயது இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனால் கடந்த நான்கு மாதங்களாக எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அடுத்து இந்தோனேசியாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த அந்தப் பெண்ணை சவும்யஜித் கோஷ் திருமணம் கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நானும், அந்த பெண்ணும் பழகினோம். அவர் மைனர் என்பதால் நான் ஏமாற்றிவிட்டதாக கூறினார்கள். எனக்கும் 22 வயது தான் ஆகிறது. இந்த புகாரால் ஏற்பட்ட மனா உளைச்சலால் நான் எந்த முக்கியமான போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனால் எனது உடல் எடை 10 கிலோ அதிகரித்திருக்கிறது.

நடந்ததை நினைத்து புலம்புவதை விட, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தேன், அந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டேன். 

இனி ஒலிம்பிக் போட்டியில் கவனம் செலுத்த இருக்கிறேன். அதற்கான பயிற்சியில் தீவிரமாக இறங்க உள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.