.

பார்கிங் வசதி இல்லாத ஓட்டல்களுக்கு பூட்டு : உயர் நீதிமன்றம் அதிரடி

February 10, 2017, Chennai

Ads after article title

சென்னை, பிப்.10 (டி.என்.எஸ்) பார்க்கிங் வசதி இல்லாத ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட உணவகங்களை மூடும்படி காவல் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது குறித்து, சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஓட்டல்களில் வாகன நிறுத்தம் வசதி இல்லாத காரணத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே அத்தகைய ஓட்டல்களை மூட வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உரிமம் வழங்கும் போது வாகன நிறுத்தம் உள்ளதா என மாநராட்சி ஆய்வு செய்ததா? என்று கேள்வி எழுப்பியதோடு, வழக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் நிலுவையில் இருந்தும் மாநகராட்சி இதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். எத்தனை முறை அறிவுறுத்தியும், வாகன நிறுத்தம் அமைக்காததால், அந்த ஓட்டல்களை உடனடியாக மூட உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் காரணமாகவே, சென்னையில் உள்ள சரவண பவன் ஓட்டல்கள் சில மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.