.

பாராளுமன்றத்தில் யாருடன் கூட்டணி இல்லை - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

August 10, 2018, Chennai

Ads after article title

பாராளுமன்ற தேர்லில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


அரியானா மாநிலம் ரோட்டக் சென்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து கூறுகையில், டெல்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. மக்கள் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளது. எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது.

வரவுள்ள அரியானா சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.