பாம்புக்கு பால் ஊற்றுவதேன்? ஆதி மனிதனின் விஞ்ஞானம்

June 14, 2017, Chennai

Ads after article title

Chennai, June 14: பலர் அறிந்த விஞ்ஞான உண்மை யாதெனில் பாம்பு பாலும் குடிக்காது முட்டையும் சாப்பிடாது. பிறகு ஏன் பால் ஊற்றுகின்றனர்? இவ்வழக்கம் எங்கிருந்து ஏன் துவங்கியது?  காலத்தில் பாம்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் மனிதர்கள் குறைவு.


இரவு நேரங்களில் பாம்புகளால் தொல்லைகள் அதிகம். யாரை சீண்டும் என்று கூற இயலாது. மேலும் அடர்ந்த காடுகளில் மக்கள் வாழ்ந்தனர். இந்து 
தர்மத்தின் படி எந்த உயிரையும் கொல்ல கூடாது ஆனால் இந்த பாம்புகளை விட்டு வைத்தால் நம்மை தீண்டிவிடும். அதனால் அதன் இன பெருக்கத்தை கட்டு படுத்தவே புற்றுக்கு பாலும் முட்டையும்  வைக்க தொடங்கினர். 

பாம்புகளின் இன பெருக்கம் சற்று வித்யாசமானது. பெண் பாம்பு தான்உடலில்  இருந்து ஒரு வித்யாசமான திரவியத்தை வெளியிடும். அதன் பெயர் பரோமோன்ஸ். இந்த வாசனையை நுகர்ந்த பிறகு தான் ஆண் நாகம் பெண் நாகத்தை நெருங்கும். இந்த வாசனையை கட்டுபடுத்தவும் இன பெருக்கத்தையும் கட்டுபடுத்தவே பாம்பு குடிக்காது என்று தெரிந்தும் ஆதி மனிதர்கள் முட்டையும் பாலும் வைத்து வழிபட்டனர்.

சரி, இதில் வழிபட என்ன உள்ளது என்று கேட்கிறீர்களா? நமது நன்மைக்காக ஒரு இனத்தின் பெருக்கத்தை அழிக்கின்றோம் அதற்காக பாம்புகளிடம் மனமாற மன்னிப்பு வேண்டுவதற்கு தான் இந்த வழிபாடு.