.

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட காஷ்மீர் போலீஸ் கான்ஸ்டபிள் கொலை

July 06, 2018, Chennai

Ads after article title

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்கப்பட்ட சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியை சேர்ந்த ஜாவித் அகமது, என்ற போலீஸ் கான்ஸ்டபிள், நேற்று இரவு பயங்கரவாதிகள் கடத்தி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தின் பரிவான் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஜாவித் அகமது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.